பேழை
     
  • கி.மு.
  • சோழர்கள்
  • சேரர்கள்
  • பாண்டியர்கள்
  • யாழ்ப்பாணம்
  • இசை
  • பழமொழிகள்
  • நூல்கள்
  • தமிழ்மொழி
  • அளவீடுகள்
  • புலவர்கள்

தமிழின் உச்சரிப்புகளை சிறந்த முறையில் ஒழுக

தமிழ்மொழி

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் - ஔவையார் (வெண்பா)
  • ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்.
  • கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது.
  • யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை
  • ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி.
  • வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான்.
  • பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
  • கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
  • வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்.
  • வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள்
  • ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி
  • கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது
  • யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை
  • ஆனை அலறலோடு அலற அலறியோட
  • கடலோரம் உரல் உருளுது.
    கடலோரம் உரல் உருளுது!
  • புட்டும் புதுப் புட்டு
    தட்டும் புதுத் தட்டு
    புட்டைக் கொட்டிட்டு
    தட்டைத் தா.
  • வீட்டுக்கிட்ட கோரை
    வீட்டுக்கு மேல கூரை
    கூரை மேல நாரை.
  • துள்ளும் கயலோ
    வெள்ளம் பாயும்
    உள்ளக் கவலை
    எள்ளிப் போகும்.
  • கருகும் சருகும் உருகும்
    துகிரும் தீயில் பட்டால்!

« களவழி நாற்பது - சாமி. சிதம்பரனார்கால அளவீடுகள் »
  • அகரவரிசை
  • எழுத்துக்கள்
  • எழுதி
  • களஞ்சியம்
  • கிரந்தம்
  • சொல்லாட்டம்
  • கலைச்சொற்கள்
  • வினாவல்
  • பேழை
  • திருக்குறள்
  • திரட்டுகள்
  • சுருக்கச் சொற்கள்
  • எண்கள்
  • அளவைகள்
மேலே செல்ல ↑

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.